என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"
- தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
- போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.
- முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்றார் அண்ணாமலை.
- தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு.
2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன.
கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன. இது தவிர, முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
- அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பள்ளி மாணவர்களின் கண்கள் பசியால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்கு சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பள்ளி விடுதியில் 3,4, 5 ஆம் வகுப்பை சேர்ந்த 8 மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது சில சக மாணவர்கள் விளையாட்டாக அவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசையை தேய்த்துள்ளனர்.
இதனால் 8 பேரும் தூக்கத்தில் இருந்து விழித்தபோது அவர்களின் கண் இமைகள் திறக்க முடியாமல் ஒட்டிக் கொண்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வானம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிய்வ்துள்ளது.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
- இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது.
புதுடெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் மகத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன? என்பதையும், தேசிய பாதுகாப்பில் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு பங்கு வகிக்கின்றன? என்பதையும் மாணவர்களுக்குப் புரிய வைக்கும் நோக்கில் இது தயாரிக்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த சிறப்பு பாடத்தொகுதி 2 பகுதியாக உருவாக்கப்படுகிறது. இதில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பகுதியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றொரு பகுதியும் இருக்கும் என்றும் அவை மேலும் தெரிவித்தன.
- இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது.
- பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது. இதனை இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
'ப' வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும், ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை கருதுகிறது.
எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
- மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
- படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 23,49,616 பள்ளி மாண வர்களுக்கும் சுமார் 2,00,000 கல்லூரி மாணவர்களுக்கும் கட்டணமில்லா பயணத்திற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது புத்தகப்பை மற்றும் உணவுப் பைகள் கொண்டு செல்வதால் பேருந்தினுள் கூட்ட நெருக்கடியில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கூட்ட நெருக்கடியால் மாணவ, மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம். சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.
ஆகவே, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வண்ணம், நெருக்கடி மிகுந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக தனிப் பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, பிள்ளைகளை அறிவுறுத்தி வளர்க்க வேண்டியதில் பெற்றோரின் கடமை உள்ளது. பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு மாணவர்கள் ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது. மாணவிகள் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. நடத்துனர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்பதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்கு பதிவு கூட செய்யலாம்.
ஆகவே மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
- படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
- பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கினால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கூறுகையில்,
* நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை, படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
* பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம்.
* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும்.
* சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது.
* படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
* பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
* மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
* பிள்ளைகளுக்கு சரியான அறிவுரைகளை வழங்கி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
* பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.
* மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
- ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர அரசு 'தல்லிக்கு (தாய்) வந்தனம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1-ம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
- கடந்த ஏப்ரல் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
- ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் திட்டவட்டமா தெரிவித்தார்.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு ஏப்ரல் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 25ம் தேதி (மறுநாள்) முதல் கோடை விடுமுறை தொடங்கியது.
இதனால், விடுமுறை நாட்களை இனிதே செலவிட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள பல முக்கிய சுற்றுலா தலங்கள் பொது மக்களின் கூட்டத்தால் அலைமோதியது.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலும் அதிகமாக இருந்தது.
இதனால், பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு," பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் "அரசு- அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து நாளை அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம், தோரணம் என மாணவர்களை கவரும் வகையிலும், அவர்களை வரவேற்கவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
- பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
- சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.
அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.
எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.
அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
- மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
- திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.
ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.
அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.
இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.
இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






